புதன், 27 ஜூலை, 2011

உங்களுடைய வலைப்பூவினுடைய டிராபிக் ஐ அதிகரிப்பது எவ்வாறு

இன்று நாம் பலர் வலைப்பூ எழுதுகின்றோம் அவற்றின் டிராபிக் ஐ எவ்வாறு அதிகரிப்பது எவ்வாறு என்று பலருக்கு தெரியாது. அப்படிபட்டவர்களுக்குத்தான் இது.

முதலில் நாம் நம்முடைய வலைப்பூவிற்கு நல்ல அர்த்தமுள்ள பெயர்களை வைப்பது. அத்துடன் டொமைன் பெயரை இலகுவாக வைத்தல்.

உங்களுடைய வலைப்பூவிற்கு கண்கவரும் வகையில் அழகிய  Template களை
சேருங்கள். அத்துடன் உங்கள் வலைப்புகளில் மிகவும் பாரமான Gadget களை சேர்க்க வேண்டாம். அது உங்களுடைய  வலைப்பூ Load ஆக தாமதமாகும்.
அதானால் பெறுமதியான  வாசகர்களை இழப்பீர்கள்.

அத்துடன் அனாவசியமான  Gadget களை தவிருங்கள் .

அவ்வாறு சேர்க்க வேண்டி ஏற்பட்டால் அதன் link இல்  வைரஸ்  நச்சு நிரல் உள்ளதா என்பதை Check

உங்களுடைய டொமைன் முகவரியில் உங்கள் தளத்தை குறிக்கும் பெயர் பகுதியை காட்சிப்படுத்தல் .
உ+ ம்
என்னுடைய வலைப்பூவில் மேலே சூரியகாந்தி என தமிழில்  குறிப்பிட்டு கிழே sooriyaganthi என் ஆங்கிலத்தில் குறிப்பிட பட்டிருப்பது போல.

அடுத்து உங்களுடைய வலைப்பூவை  Search Engine இல் சேருங்கள்.
இது எவ்வாறு என்று  சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

நீங்கள் Search Engine இற்கு சென்று
  Add url to என குறிப்பிட்டு அடுத்து  Search Engine பெயரை குறிப்பிட்டு Search  பண்ணினால்  உங்களுக்கு உரிய தளம் காட்டப்படும்
உ + ம்
கூகிள் இல் சேர்க்க வேண்டும் என்றால்

add url to google

யாஹூ வாக இருந்தால்

add url to yahoo

அதன் பின் அத்தளத்தை கிளிக் செய்து  உங்களுடைய தளத்தின் URL  ஐ சேர்க்கவும் .

அடுத்து உங்களுடைய தளத்தில் சிறந்த தலைப்பூகளில் கட்டுரைகளை எழுதுங்கள். அக்கட்டுரைகளை உங்களுடைய பாணியிலே எழுதுங்கள். அடுத்தவர் பாணியை பின்பற்ற வேண்டாம்.

எல்லாரையும் போல் ஒரே தலைப்பில் எழுதாமல் வித்தியாசமான தலைப்பூகளில் எழுதுங்கள்.அத்துடன் உங்கள் கட்டுரைகளை அனைத்து வயதினரும் பார்க்ககூடிய வகையில் எழுதுங்கள்.

தலைப்பிக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் எழுத வேண்டாம்.

அத்துடன் உங்கள் வலைப்பதிவை வலைப்பூ திரட்டும் தளம்களில்  பதிவு செய்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களுடைய ஒவ்வொரு கட்டுரைகள் வெளியிடப்படும் போதும் அதை வலைப்பூ திரட்ட்டும் தளம்களில்   சமர்பியுங்கள்.

நீங்கள் வலைப்பூக்களை திரட்டும் தளங்களுக்கு கட்டுரை களை  சமர்பிக்கும்
போது அங்கு சமர்ப்பிக்கப்படும் கட்டுரை தலைப்பிக்கும் உங்கள் கட்டுரைக்கும்
சம்பந்தமில்லாத  வகையில் எழுத வேண்டாம் .அதன் மூலம் வாசகர் வட்டத்தை இழப்பீர்.

                     
அத்துடன் சகோதர வலைத்தளங்களுக்கு செல்லுங்கள். அத்துடன் அவர்களுடைய ஆக்கங்களுக்கு ஆக்கபூர்வமான Comment  இடுங்கள். அதன் மூலம்  அவர்களும் உங்களுடைய தளத்திக்கு வருவார்கள்.அத்துடன் அவர்களும்  Comment  இடுவார்கள். அது உங்களுக்கு உந்து சக்தியாக அமையும்.

வலைப்பூ திரட்டும் தளங்களில் உள்ள அடுத்த சகோதரர்களுடைய வலைப்பூ ஆக்கங்களுக்கு Vote பண்ணுங்கள். அதன் மூலம் அவர்களும் உங்களுடைய ஆக்கத்துக்கு Vote  பண்ணுவார்கள்.அது உங்களுடைய டிராபிக் ஐ அதிகரிக்கும்

உங்களுடைய வலைப்பூவை சமுக வலைத்தளங்களில் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள் .அதன் மூலம் உங்கள் வலைப்பூவின் டிராபிக் அதிமாகும்.

1 கருத்து: